Sunday, 6 July 2014

கிறுக்கல்கள்


பசி தூக்கம் மறந்தேன்
பஞ்சணை சுகம் மறந்தேன்
நெஞ்சினில் உன்னை விதைத்ததினால்

இன்ன நோயென அறிந்திலேன்
இதயம் நின்று நின்று துடிக்க
இதழ்கள் ஈரம் மறந்து காய….

பனிப்பொழிவும் குளிரூட்டவில்லை
கடும் வெயிலும் சுட்டெரிப்பதில்லை
உன்னை சுமந்து நடக்கையில்…..

உந்தன் நினைவில் பேனா
மையால் தினம் குளியல்
வெள்ளைக் காகிதங்களில்….

என் அத்தனை கவியும்
தோற்றே போகும்
உந்தன் கண் இமைப்பின் அழகில்…..

எத்தனை கிறுக்கல்களை பரிசளிப்பேன்
என் உயிரின் மொழி நீயானாய்
எழுதியே தீர்க்கப் போகிறேன் ஆயுளையும்……

No comments:

Post a Comment